Skip to main content

Posts

Showing posts from May, 2021

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

உயிரே உன் விலை என்ன?

 உயிரே உன் விலை என்ன? ”ஆஸ்பத்திரியில கூட ஆக்சிஜன் இல்லை. ஆனா, நீங்க உயிரைக் காப்பாத்தீட்டீங்க. ரொம்ப நன்றி.” அவர் உணர்ச்சிப் பெருக்கில் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுக்கிறார். அன்பரசு வாங்கவில்லை. “நாங்க இந்த சேவையை இலவசமா செய்யறோம். உயிருக்கு விலை இருக்கா சார்?” அன்பரசின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. உங்களிடம்?                        ***       *** அழைப்பு வந்தது அம்பத்தூரில் இருந்து. அம்மாவிற்கு மூச்சு திணறுகிறது என பதறுகிறார் மகன். மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை என அழுகிறார். விரைந்து வருகிறார் அன்பரசு. ஆக்சிஜன் அளவு 72. ஜெயராணி என்ற அந்த அம்மா துவண்டு கிடக்கிறார். இரண்டு மணி நேரப் போராட்டம். ஆட்டோவில் இருக்கும் ஆக்சிஜன் அம்மாவின் உயிருக்கு ஊட்டம் கொடுக்கிறது. எழுந்து உட்கார்கிறார். அன்பரசை கையெடுத்து கும்பிடுகிறார் மகன்.  “எல்லாரையும் கூப்பிட்டோம். யாருமே வரலை. நீங்க வந்துட்டீங்க. நீங்க செய்யற வேலை யாரும் நினைச்சுக் கூட பார்க்க முடியாத விசயம்.”            ...

உங்க வீட்டுப் பிள்ளை!

 உங்க வீட்டுப் பிள்ளை! ”அம்மாவை காப்பாத்திட்டிங்க தம்பி.” கால்களில் விழுந்தார் அவர். பதறிய கவியரசு தடுக்கிறார்.  *** *** சில மணி நேரம் முன்பு அழைப்பு வந்தது. கவியரசின் ஆக்சிஜன் ஆட்டோ பறந்து வந்தது. இடம் கே.எம்.சி மருத்துவமனை.  கட்டிடத்தின் தாழ்வாரத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார் ஒரு அம்மா. கோவிட் நோயாளி. படிப்படியாக உயிர் அடங்கிக் கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் அளவு 60-க்கும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் இடம் இல்லை. காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார் அந்த தாயின் மகன்.  மகனுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். அம்மாவிற்கு ஆக்சிஜன் கொடுக்கிறார். இரண்டு மணி நேரம். ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. அம்மாவின் முகம் தெளிகிறது.      அம்மாவை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைகிறது. அட்மிஷன் கிடைத்து விட்டது. அம்மா நம்பிக்கையோடு நடந்து செல்கிறார். இனி கவலை இல்லை.   அந்த மகனைப் பொறுத்தவரை கவியரசு கடவுளாகத் தெரிகிறார். தன் தாய்க்கு உயிர் கொடுத்தவர் அல்லவா? கவியரசு மறுக்கிறார்.  “எங்களை கடவுளா பார்க்க வேணாம். உங்களில் ஒருத்தனா பார...

சிறகுகள் ஹாக்கி கிளப் சார்பாக கபசுர குடிநீர்.

 சிறகுகள் ஹாக்கி கிளப் சார்பாக கொரோனாவை தடுக்க சளி தொடர்பான குறி குணங்களை  குறைத்து, உடல் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் வகையில், 15 வகை மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர் சூரணம் தயாரித்து வழங்குகிறோம்.  இதை அருந்தினால் தீரும் நோய்கள், காய்ச்சலும் கூடிய தலை வலி, இருமல், ஜலதோஷம், உடல் சோர்வு வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை கரகரப்பு போன்றவை நலமாகும். English : On behalf of the 𝙎𝙄𝙍𝘼𝙂𝙐𝙂𝘼𝙇 𝙃𝙊𝘾𝙆𝙀𝙔 𝘾𝙇𝙐𝘽, we prepare and supply capsules drinking water containing 15 types of herbs to reduce the symptoms associated with colds to prevent corona and improve the body's immunity.  It can cure ailments such as fever, headache, cough, cold, fatigue, abdominal pain, vomiting, diarrhea and sore throat. - SIRAGUGAL HOCKEY CLUB  - SAARAL SOCIAL WELFARE AND SPORTS ACADEMY

காப்பாற்றுவோம்! தொடர்ந்துக் காப்பாற்றுவோம்!!

  சிரமப்பட்டு மூச்சு விடுகிறார். பெயர் முகமது ஷெரிப். வயது 80. இடம் திரு.வி.க நகர். வாடி வதங்கிக் கிடக்கிறார். ஆக்சிஜன் ஆட்டோவை அழைக்கிறார்கள். உடனே வந்து விட்டார் பரத். ஆக்சிஜன் அளவு 78. தொடர்ந்து இறங்கி வருகிறது. ஆக்சிஜன் மாஸ்க் அணிவிக்கிறார். உயிர்க் காற்று பெரியவரின் நெஞ்சுக்குள் பரவுகிறது.   இரண்டு மணி நேரம். மூச்சுத் திணறல் நின்று விட்டது. பெரியவரின் முகத்தில் மெதுவாக உயிர்க் களை அரும்புகிறது. பெரியவரிடம் சிறிது நேரம் அமைதி. பின்னர் குலுங்கி அழுகிறார்.  ”ரெண்டு நாள் முன்னாடி உங்களைப் பார்த்து இருந்தா என் பொண்டாட்டியைக் காப்பாத்தி இருக்கலாமே. உங்களைப் பத்தி தெரியாமப் போச்சே ……..” இரண்டு நாள் முன்னர் அக்சிஜன் கிடைக்காமல் பெரியவரின் மனைவி இறந்து விட்டார். பரத்துக்கு மனம் கலங்குகிறது. பெரியவரைத் தேற்றுகிறார். பெரியவரின் குடும்பத்திடம் இருந்து விடை பெறுகிறார். இம்மாதத் தொடக்கத்தில் பரத்துக்கு புதிதாக வேலை கிடைத்தது. அந்த வேலையை பரத் விட்டு விட்டார். அப்போது தன் தாயிடம் பரத் இப்படி சொன்னார். ”வேலைக்குப் போனா பணம் தான் கிடைக்கும். பணத்தால உயிரைக் காப்பாத்த முட...

பேசுவோம்! நம்பிக்கை ஊட்டுவோம்! விட்ரமாட்டோம்!!

  ”ஆஸ்பத்திரிக்கு நீங்க வருவீங்கன்னா, நாங்க வருவோம்”. நம்மை உரிமையுடன் அழைத்தது ஒரு கோவிட் நோயாளியின் குடும்பம். ஆக்சிஜன் ஆட்டோவை விரட்டினார் தமிழ்மணி. நின்ற இடம் ஓமந்தூரார் மருத்துவமனை. நோயாளி முதிய பெண்மணி. அவர் முகத்தில் வேதனை; உயிர் பயம். ஆக்சிஜன் அளவு 70. அட்மிஷன் ஆக பல மணி நேரம் பிடிக்கும்.    தமிழ்மணி உற்சாகமாக பேசினார். “அம்மா உங்களுக்கு ஒண்ணும் இல்லை. சீக்கிரம் சரியாயிடுவீங்க”. இரண்டு மணி நேரம் ஆக்சிஜன் பாய்ந்தது. ஆக்சிஜன் அளவு 98-க்கு வந்தது. ”உங்களுக்கு சரியாயிடுச்சு அம்மா”. தமிழ்மணியின் உற்சாகம் அம்மாவையும் தொற்றிக் கொண்டது. கண்களில் நம்பிக்கைச் சுடர் தெரிந்தது. சிகிச்சை பலனளிக்க இந்த நம்பிக்கை அவசியம்.    அம்மாவிற்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. தமிழ்மணி ஆக்சிஜன் கொடுத்தார். அதை விட முக்கியமாக நம்பிக்கை கொடுத்தார். மருத்துவமனைக்குள் செல்லும் முன் அம்மா தெம்பாக சொன்னார். “இப்படி பேசிக்கிட்டு இருந்தாலே நான் நல்லா இருப்பேன் தம்பி.” ”பேசுவோம்”  “வுட்ர மாட்டோம்” -பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

உயிர்க் காற்று

                              ”மூச்சு விட முடியவில்லை. தயவு செஞ்சு வர முடியுமா?” அழைப்பு வந்தது தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து. குரலில் இருந்த பதட்டம் நம்மைப் பதற வைக்கிறது. ஆட்டோ ஆம்புலன்ஸ் பாய்கிறது.   தனலட்சுமி என்ற வயதான பெண்மணி. கோவிட் பாசிட்டிவ் நோயாளி. மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. இப்போது, தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிஷனுக்காக காத்துக் கிடக்கிறார். அட்மிஷனுக்கு சில மணி நேரம் ஆகலாம். அதற்குள் மூச்சு முட்டுகிறது.    நாம் சென்ற போது மூச்சுத் திணறிக் கிடந்தார். ஆக்சிஜன் அளவு பார்த்தோம். 74 என காட்டியது. மிக அபாயமான கட்டம். நமக்குள் நடுக்கம் பாய்கிறது. நிதானப்படுத்திக் கொள்கிறோம். ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்தோம். அவர் இருந்த காரை விட்டு இறங்க முடியவில்லை. ஆட்டோவில் இருந்து காருக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுத்தோம். அளவை சரியாக வைத்தோம். ஆக்சிஜன் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்த நெஞ்சுக் கூட்டிற்குள் உயிர்க் காற்று...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...

எனர்ஜி கொடுக்கும் – வியாசர்பாடி!

         செம்ம என்ர்ஜியில் இருக்கிறோம். இன்று வியாசர்பாடி சென்று வந்தோம். DPAC & வியாசைத் தோழர்களின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை மையத்தைப் பார்த்தோம். உடலிலும் மனதிலும் எனர்ஜி பாய்ந்தது. மெய் சிலிர்த்தது. கண்கள் கசிந்தன.        அணி வகுத்து நிற்கும் ஆட்டோக்கள். உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள். மக்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் மாணவிகள். அழைப்புகளுக்கு பதில் சொல்லும் தொண்டர்கள். அழைப்பு வந்ததும் பாய்ந்து செல்லும் ஓட்டுநர்கள். ஆக்சிஜனை நிரப்ப ஓடியாடும் நிர்வாகிகள். தக்க சமயத்தில் தேநீரும், உணவும் கொடுக்கும் தொண்டர்கள் ….. இது தான் இலவச ஆம்புலன்ஸ் சேவை மையம்.        இல்லை. இது மட்டுமில்லை. 25 இளைஞர்களின் முடிவற்ற எனர்ஜி. இது தான் DPAC & வியாசைத் தோழர்களின் இலவச ஆம்புலன்ஸ் சேவை மையம்.        ”முன்னாடி அண்ணன்கள் தான் கஷ்டமான வேலைகளை செய்வாங்க. இப்போ நாங்க பாதி வேலை செய்யுறோம். சமமா இருக்கிறோம்.” என்று பெருமை பொங்கும் லாவண்யா, திரிஷா, ரஸியா பானு, ஆர...

சுவாசக் காற்றே …. வா! உயிர் கொடு!

         ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் கான்சடிரேட்டர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை நன்கொடையாக மக்களுக்கு வழங்க உள்ளார்கள் திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்கள். இதயம் இயங்க சுவாசம் தேவை. நாட்டின் இதயம் சுவாசம் இல்லாமல் தவிக்கிறது. உடனடியாக ஆக்சிஜன் வேண்டும். மருந்துகள் வேண்டும். கருவிகள் வேண்டும்.   எல்லாவற்றையும் விட உதவி செய்யும் நல்ல மனங்கள் வேண்டும். அத்தகைய நல்ல மனம் கொண்டவர்கள் திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்கள். இவர்கள் கொரோனா எதிர்ப்புப் போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். பத்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், ஐம்பது ஆக்சிமீட்டர்கள், ஐம்பது தெர்மல் ஸ்கேனர்கள், ஐம்பது PPE Kit உள்ளிட்டவற்றை வாங்கினார்கள். இவற்றை பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) மற்றும் சாரலிடம் ஓப்படைக்க உள்ளார்கள். இந்த உயிர் காக்கும் கருவிகளை கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்துவோம். இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவோம். அதிகபட்சமான மக்கள் பயனடைய செய்வோம்.       இந்தப...

வீரமே! நீ வாழ்கவே!

         ”இது சாத்தியம் இல்லை.” ஆட்டோ ஆம்புலன்ஸ் பற்றி நாம் பேசிய போது, முதலில் தோன்றிய கருத்து இது.        இது எப்படி சாத்தியம் ஆனது? ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய பிறகு எல்லோரும் கேட்கும் கேள்வி இது.        இந்த சேவையை செய்யும் இளைஞர்கள் தாங்கள் செய்யும் வேலையின் அபாயத்தை உணர்ந்து தான் செய்கிறார்களா? இவர்களுக்கு அச்சம் இல்லையா? இவர்களின் குடும்பங்கள் தடுக்கவில்லையா?        இது நிறைய பேரின் கேள்விகள். கேள்வி கேட்கும் எல்லோரும் உங்களைப் பாராட்டுகிறார்கள். நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் என நெஞ்சார வாழ்த்துகிறார்கள். உங்களுக்காக இறைவனை வேண்டும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றன.         அருமை நண்பர்களே!        ஆட்டோ ஆம்புலன்ஸ் வீரர்களே! எங்கள் வியாசைத் தோழர்களே!            உங்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குகிறோம். உயிரைப் பணயம் வைக்கும் உங...

உணவு கொடுப்போம்! உயிர் காப்போம்!

         பட்டினி என்பது கொரோனாவின் பக்க விளைவுகளில் ஒன்று. லாக்டவுன் காலத்தில் வீடில்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் உழைப்பாளிகள் என்ன செய்வார்கள்? இவர்களில்   சிலருக்காவது உணவு கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். நேற்று, மதுரவாயல் அரோமா உணவக உரிமையாளர் 15 பொட்டலம் பிரியாணியை வழங்கினார். இதனை வீதிகளில் உறங்கும் உழைப்பாளிகளுக்கு கொடுத்தோம். பதினைந்து பேரின் ஒரு வேளைப் பசியைப் போக்கிய அரோமா உரிமையாளருக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கூடுதலாக உணவு அளிக்க, மதுரவாயல் பகுதியில் உள்ள உணவகங்களில் பேசி வருகிறோம்.   நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “பசியைப் போக்கும் போரில் இறங்குங்க”     - பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) -சாரல், மதுரவாயல்-அமைந்தகரை    

இனையும் கைகள் : நம்முடன் தொழிலாளர் பண்பாட்டு மையம்

  நாங்களும் … பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) மற்றும் சாரலின் நிவாரண வேலைகளில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம். நாங்கள் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள்.            நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆர்சனியம்-ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மக்களிடம் விநியோகித்தோம். தைலாவரம் பகுதியில் சுமார் 200 பேரிடம் பேசி மருந்து கொடுத்துள்ளோம்.                கொரோனா பற்றிய அச்சத்தைப் போக்கி நம்பிக்கை ஊட்டி வருகிறோம்.        கொரோனா எதிர்ப்புப் போரில் நாங்களும் இணைந்து விட்டோம்.     நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “நீங்களும் இணையுங்கள்”     - பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) -தொழிலாளர் பண்பாட்டு மையம்,   கூடுவாஞ்சேரி

புதிய தொடக்கம்

 கொரோனா பேரிடரை எதிர்கொள்வதில் எதிர்ப்புச்சக்திக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் அச்சம் உண்டாகும் போது எதிர்ப்புச் சக்தியின் திறன் குறையும். அதை கணக்கில் கொண்டு மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி ஆர்சனிக்-ஆல்பம்30 ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டது. #வுட்ராதீங்க....Nevergiveup படங்கள்:

ஆட்டோ ஆம்புலன்சின் முதல் பயணம்!

  ஆட்டோ ஆம்புலன்சின் முதல் பயணம்!        ஜுரம், தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப் பிரச்சனை என்ற அறிகுறிகள் பலருக்கு இருக்கிறது. சோதித்தால் கோவிட் பாசிட்டிவ் என வரும். இவர்களில் 15% பேர் மட்டும் தான்   மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். 1% பேருக்கு தான் ஆக்சிஜன் தேவைப்படும். 85% பேரை வீட்டில் வைத்தே குணப்படுத்தலாம்.        ஆனால், இந்த 15% பேரை தக்க சமயத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். தக்க சமயத்தில் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இது சாத்தியம் இல்லை. ஆனால் ஆம்புலன்சுக்கு கடும் தட்டுப்பாடு. அதன் கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது. சாதாரண உழைப்பாளி மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது மிக சிரமமாகி விட்டது.     இந்தப் பிரச்சனையை நம்மால் தீர்த்து விட முடியாது. இருந்தாலும் சாதாரண மக்களின் ஆம்புலன்ஸ் தேவையை நிறைவேற்ற நம்மால் முடிந்ததை செய்ய முடிவு செய்தோம். வட சென்னைப் பகுதியில் இருந்து தொடங்க முடிவு செய்தோம். வ...

உதவிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் - DPAC+வியாசை தோழர்கள்+சாரல் அறிக்கை

  நன்றி அல்ல …. வாழ்த்து!        நாட்டுப்பற்று, மக்கள்ப்பற்று, பகுத்தறிவு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை இளம் தலைமுறையிடம் உருவாக்க நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் கொரோனா தாக்கியது. நாம் நிவாரண வேலைகளில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்தது. மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது நாடு. பெருந்தொற்றால் மடிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது. என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? என தெரியவில்லை. இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குவோம். இருப்பதைக் கொண்டு தொடங்குவோம். அ ந்த வகையில் கடந்த 2 வாரங்களாக செயல்பட்டு வருகிறோம். சா ரலைச் சேர்ந்த நாம் பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) உடன் இணைந்து வேலை செய்கிறோம்.   நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்ய உதவுவது, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுத் தருவது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருத்துகளை வாங்கித் தருவது, நோயால் தாக்கப்பட்டவர்களிடம் ஆறுதலாக பேசுவது, நம்பிக்கையூட்டுவது, ஆல்பம்-30 மருந்தை விநியோகிப்பது, வேலை இழந்து வாடும் உழைப்பாளிகளுக்...

வியாசர்பாடியில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்!! - புதிய தொடக்கம்

 வியாசர்பாடியில் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ்!! கொரொனா இரண்டாம் அலையில் ஆம்புலன்ஸ் இல்லாமல் தவிக்கும் கொரொனா மற்றும் இதர நோயாளிகளுக்கு "இலவச ஆட்டோ ஆம்பலன்ஸ்" சேவை செய்து வருகிறோம். தற்போது கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள அரும்பாக்கம் காலனி, ஆரம்பாக்கம் பகுதியில் முதியவர் ஒருவருக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் தேவையென அழைப்பு வந்தது. எனவே, நண்பர் தமிழ்மணி தற்போது அவர்களை சென்னை மருத்துவமனைக்கு அழைத்துவர நேரில் சென்றுள்ளார். வியாசை தோழர்கள் #பேரிடர்_மக்கள்_உதவி_மையம் (DPAC) #வுட்ராதீங்க_Nevergiveup

ஒன்றுபடுவோம் - DPAC+சாரல் அறிக்கை

  ஒன்றுபடுவோம்!        நாங்கள் குரோம்பேட்டை பகுதி இளைஞர்கள். நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா எதிர்ப்பு வேலைகளை செய்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்த மூன்று பேர் கொரோனா-வால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.   பாதிப்பு தீவிரமாக இருந்தது.          தீவிர பாதிப்பில் இருந்த இரண்டு பேரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். இருவரையும் சி.டி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். இருவருக்கும் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தோம். மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தோம்.   இறுதியாக பல்லாவரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரு வார   சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக தேறி வருகின்றனர்.            மிதமான பாதிப்பில் இருந்த ஓருவரை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளோம். இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் வாங்கித் தருகிறோம். இவர்கள்...