உயிரே உன் விலை என்ன?
”ஆஸ்பத்திரியில கூட ஆக்சிஜன் இல்லை. ஆனா, நீங்க உயிரைக் காப்பாத்தீட்டீங்க. ரொம்ப நன்றி.”
அவர் உணர்ச்சிப் பெருக்கில் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுக்கிறார். அன்பரசு வாங்கவில்லை.
“நாங்க இந்த சேவையை இலவசமா செய்யறோம். உயிருக்கு விலை இருக்கா சார்?” அன்பரசின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. உங்களிடம்?
*** ***
அழைப்பு வந்தது அம்பத்தூரில் இருந்து. அம்மாவிற்கு மூச்சு திணறுகிறது என பதறுகிறார் மகன். மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை என அழுகிறார். விரைந்து வருகிறார் அன்பரசு.
ஆக்சிஜன் அளவு 72. ஜெயராணி என்ற அந்த அம்மா துவண்டு கிடக்கிறார். இரண்டு மணி நேரப் போராட்டம். ஆட்டோவில் இருக்கும் ஆக்சிஜன் அம்மாவின் உயிருக்கு ஊட்டம் கொடுக்கிறது. எழுந்து உட்கார்கிறார். அன்பரசை கையெடுத்து கும்பிடுகிறார் மகன்.
“எல்லாரையும் கூப்பிட்டோம். யாருமே வரலை. நீங்க வந்துட்டீங்க. நீங்க செய்யற வேலை யாரும் நினைச்சுக் கூட பார்க்க முடியாத விசயம்.”
”செய்வோம்” “வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment