Skip to main content

Posts

Showing posts from June, 2021

June - 23 / 2021 - International Olympic day .

  ஒலிம்பிக்ஸ் போட்டியை ஒருங்கினைக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டதை ஒட்டி இந்நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் விளையாட்டை ஊக்குவிக்கவும், வாழ்க்கையில் விளையாட்டுக்கு ஓர் முக்கிய பங்குண்டு என்ற செய்தியை அனைவரிடமும் பரப்பும் விதமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக்ஸ் போட்டி, மதம் இனம் , நிறம் , நாடு என அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி சரிசமமான போட்டியை நிலைநிறுத்த 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஒலிம்பிக்சின் குறிக்கோள்கள் (Motto's) : விரைவாக (Faster) , உயரமாக (Higher) , பலமாக (Stronger) முதல் ஒலிம்பிக் நாள், ஜூன் 23 /1948 -ல் கொண்டாடப்பட்டது, அப்போது அந்த நிகழ்விலும், அதை ஒட்டி நடந்த விளையாட்டு போட்டிகளிலும் வெனிசுலா, பெல்ஜியம், கனடா, சுவிட்சர்லாந்து, போர்த்துகள், கிரீஸ் , ஆஸ்திரியா, பிரிட்டன் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கலந்துகொண்டன. கொரோனா பெருந்தொற்றால் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்ஸ், இன்னும் ஒரு மாதத்தில் ஜூலை 23 / 2021 தொடங்கி ஆகஸ்டு 08 2021 வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ் மற்றும் பல விளையாட்டுக்கள், அறிவியல் , சமூக நிகழ்வுகள் , செய்திகள...

ஜூன் - 21/2021 - இன்று சர்வதேச யோகா தினம்.

  பொதுவாகவே உடலுக்கு அசைவு தரும் ஏதாவது ஒரு பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நன்மை தரும் என பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கொரோனா பரவி, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நாம் அனைவரும் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளோம். இந்த கடினமான நேரத்தில் நமது உடலசைவின்மையால் நம் ஆரோக்கியத்துக்கு வரும் பாதிப்புகளைப் பற்றி பல மருத்துவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்தப் பின்னனியில், உடல் ஆரோக்கியத்தையும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் இந்த யோகா தினத்தில் மனதில் கொண்டு யோகா மட்டுமல்ல ஏதோ ஒரு வகை உடற்பயிற்சியை செய்யத்தொடங்குங்கள். நாளை வரை காத்திருக்கத் தேவையில்லை - இன்றே தொடங்கலாமே?

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

கேளுங்கள் தரப்படும் : ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - 11

  ”நம்ம கிட்ட எதுவுமே இல்லை” இது பெரிய அஜீத். இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் மையத்தின் முன்னணி ஊழியர். ஆக்சிஜன் ஆட்டோக்கள் இது வரை 170 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. தொடங்கிய போது கையில் என்ன இருந்தது? சிலிண்டர் இல்லை. ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் மாஸ்க் இல்லை. ஆக்சிஜன் ரெகுலேட்டர் இல்லை. பி.பி.இ கிட் இல்லை. கிளவுஸ் இல்லை. ஆம்புலன்ஸ் பற்றிய அறிவு இல்லை. முக்கியமாக பணம் இல்லை. எதுவுமே இல்லை.                      ***       *** இன்று எல்லாம் இருக்கிறது. 170 உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளது. எப்படி முடிந்தது? ”கேளுங்கள் தரப்படும்” என்கிறார் அஜீத். ஆம்! மக்களிடம் கேளுங்கள்; தரப்படும். முதல் ஆக்சிஜன் சிலிண்டரைக் கொடுத்தது ஒரு மாற்றுத் திறனாளி. பி.பி.இ கிட்டை கொடுத்தது சுடுகாட்டு ஊழியர். திருச்சியில் இருந்து ஒரு குழந்தை போன் செய்தது. நம்பிக்கை கொடுத்தது.                      *...

ஓயாத எனர்ஜி - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் தொடர் - 10

  ”குணமடைஞ்சு வீட்டுக்கு போறவங்க, சந்தோசமா பேசுறது தான் எங்க எனர்ஜி” இது திரிஷா மற்றும் ரஸியா. இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் மையத்தின் முன்களப் போராளிகள்.                      ***       *** ஆக்சிஜன் ஆட்டோவிற்கான அழைப்புகளை எடுப்பது இவர்கள் தான். அழைப்புகளின் தன்மை? சில இடங்களில் உயிர் துடித்துக் கொண்டிருக்கும். சில இடங்களில் உயிர் பிரிந்து கொண்டிருக்கும். அழைப்புகளில் கேட்பது மரணத்தின் ஒலம்; வீசுவது சாவின் மணம்.  அழைப்பவர்களிடம் இருந்து தெளிவான விவரங்கள் பெற வேண்டும். அப்போது தான் சரியான முடிவெடுக்க முடியும். உயிர் காக்க முடியும்.  முதல் அழைப்பு வந்த நேரம் இரவு மணி இரண்டு. திரிஷாவின் கைகளில் செல்பேசி நடுங்குகிறது. உண்மையில் ஈரக்குலை பதறுகிறது.  களம் தழும்புகள் கொடுத்து பதப்படுத்துகிறது. “இப்போ அசால்டா பேசி டீட்டெயில் வாங்குறோம். முதல்ல அவங்க பதட்டத்தைக் குறைக்கிறோம். நம்பிக்கை கொடுக்கிறோம்.”        ***       *** அழைப்புகளுக்கு ஒய்வில்லை. கண்களுக்கு உறக்கம் இல்லை...

கவரிமான் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் தொடர் - 09

  ”வியாசர்பாடியில கொலை தான பன்ணுவாங்க. உயிரைக் காப்பாத்துவாங்களா” கேட்பது ஜி.எச் மார்ச்சுவரி அதிகாரி. குட்டி அஜித்தின் நெஞ்சில் கோபம். வார்த்தைகளில் நிதானம். “வியாசர்பாடியில பொறந்தா நல்லது பண்ணக் கூடாதாண்ணா”                      ***       *** சிறிது நேரம் முன்பு நடந்தது இது. அஜித் ஒரு கோவிட் நோயாளியை ஜி.எச்-க்கு அழைத்து வருகிறார். ஆட்டோ ஆம்புலன்சை வரிசையில் நிறுத்துகிறார். நோயாளியை அட்மிட் செய்ய சில மணி நேரம் ஆகலாம். செல்பேசியில் ஆட்டோவைப் படம் பிடிக்கிறார். ”டேய் போட்டோ எடுக்காதடா. யார்ரா நீ” மார்ச்சுவரி அதிகாரி தடுக்கிறார். இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைப் பற்றி விளக்குகிறார் அஜித். ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? அதிகாரிக்கு ஆச்சரியம். இது வியாசையில் எப்படி நிகழ்ந்தது? அதிகாரிக்கு அதிர்ச்சி.                      ***       *** “விய...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...