Skip to main content

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

 



”நான் எதுவுமே செய்யலை”


இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார். 


இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள். 


ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”


                                                       ***                  ***


துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.  


எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.


                                                       ****                  ***


நிழல் தரும் மரம் தன் வலிகளைச் சொல்வதில்லை. வெயிலில் வதங்கி நிழலைப் பரப்பும். வெப்பம் தாங்கி .குளிரைச் சுரக்கும். 


வெயிலில் வாடும் உயிர்கள் நிழலின் அருமையைப் பாடும். 21 குடும்பங்கள் சதீஷின் சேவையை வாழ்த்தும்.


                                                       ***                  ***  


விடை பெறும் போது சதீஷ் அமைதியைக் கலைக்கிறார்.


“வசதியானவங்களுக்கே ஆஸ்பிட்டல்ல இடம் கிடைக்கிறதுல்லை….”

அப்போ ஏழைகளுக்கு? கேள்வி தொக்கி நிற்கிறது. 




அவர் கண்களில் வேதனை வழிகிறது. நம் இதயத்தைப் பிசைகிறது. இன்னும் முடியாத போராட்டம் நம்மையும் அழைக்கிறது.  


“வுட்ர மாட்டோம்” 


-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...