Skip to main content

கேளுங்கள் தரப்படும் : ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - 11

 



”நம்ம கிட்ட எதுவுமே இல்லை”

இது பெரிய அஜீத். இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் மையத்தின் முன்னணி ஊழியர்.

ஆக்சிஜன் ஆட்டோக்கள் இது வரை 170 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. தொடங்கிய போது கையில் என்ன இருந்தது?

சிலிண்டர் இல்லை. ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் மாஸ்க் இல்லை. ஆக்சிஜன் ரெகுலேட்டர் இல்லை. பி.பி.இ கிட் இல்லை. கிளவுஸ் இல்லை. ஆம்புலன்ஸ் பற்றிய அறிவு இல்லை. முக்கியமாக பணம் இல்லை. எதுவுமே இல்லை.

                     ***       ***

இன்று எல்லாம் இருக்கிறது. 170 உயிர்களைக் காப்பாற்ற முடிந்துள்ளது. எப்படி முடிந்தது?

”கேளுங்கள் தரப்படும்” என்கிறார் அஜீத். ஆம்! மக்களிடம் கேளுங்கள்; தரப்படும்.

முதல் ஆக்சிஜன் சிலிண்டரைக் கொடுத்தது ஒரு மாற்றுத் திறனாளி. பி.பி.இ கிட்டை கொடுத்தது சுடுகாட்டு ஊழியர். திருச்சியில் இருந்து ஒரு குழந்தை போன் செய்தது. நம்பிக்கை கொடுத்தது.

                     ****       ***


அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட இலக்கு 3000 ரூபாய். நண்பர்களிடம் பேசினார். 100, 200 என்று கொடுத்தார்கள். நான்கு நாட்களில் 13,500 திரண்டது. இன்னும் முடியவில்லை. அஜீத்தின் நண்பர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அஜீத்தின் முகத்தில் புன்னகைப் பூக்கிறது.

“இலவச ஆட்டோ ஆக்சிஜன் இப்போ மக்கள் கிட்டே போயிடுச்சு. மக்கள் கைவிட மாட்டாங்க.”

                      “வுட்ர மாட்டோம்”

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...