”குணமடைஞ்சு வீட்டுக்கு போறவங்க, சந்தோசமா பேசுறது தான் எங்க எனர்ஜி”
இது திரிஷா மற்றும் ரஸியா. இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் மையத்தின் முன்களப் போராளிகள்.
*** ***
ஆக்சிஜன் ஆட்டோவிற்கான அழைப்புகளை எடுப்பது இவர்கள் தான். அழைப்புகளின் தன்மை? சில இடங்களில் உயிர் துடித்துக் கொண்டிருக்கும். சில இடங்களில் உயிர் பிரிந்து கொண்டிருக்கும். அழைப்புகளில் கேட்பது மரணத்தின் ஒலம்; வீசுவது சாவின் மணம்.
அழைப்பவர்களிடம் இருந்து தெளிவான விவரங்கள் பெற வேண்டும். அப்போது தான் சரியான முடிவெடுக்க முடியும். உயிர் காக்க முடியும்.
முதல் அழைப்பு வந்த நேரம் இரவு மணி இரண்டு. திரிஷாவின் கைகளில் செல்பேசி நடுங்குகிறது. உண்மையில் ஈரக்குலை பதறுகிறது.
களம் தழும்புகள் கொடுத்து பதப்படுத்துகிறது.
“இப்போ அசால்டா பேசி டீட்டெயில் வாங்குறோம். முதல்ல அவங்க பதட்டத்தைக் குறைக்கிறோம். நம்பிக்கை கொடுக்கிறோம்.”
*** ***
அழைப்புகளுக்கு ஒய்வில்லை. கண்களுக்கு உறக்கம் இல்லை. நோயாளிகளின் உயிர்வாதை மனதை அரிக்கிறது.
இருந்தாலும், மையத்தின் அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். எப்போதும் சிரிப்பு. வற்றாத புத்துணர்ச்சி. இது தான் ரஸியா, திரிஷா.
இவர்களுக்கு உயிர் பயம் இல்லையா?
”பயமாத்தான் இருக்கு. ஆனா, கூடப் பொறந்தவங்களுக்கு பிரச்சனைன்னா விட்டுருவோமா?”
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment