Skip to main content

June - 23 / 2021 - International Olympic day .

 



ஒலிம்பிக்ஸ் போட்டியை ஒருங்கினைக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டதை ஒட்டி இந்நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் விளையாட்டை ஊக்குவிக்கவும், வாழ்க்கையில் விளையாட்டுக்கு ஓர் முக்கிய பங்குண்டு என்ற செய்தியை அனைவரிடமும் பரப்பும் விதமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

ஒலிம்பிக்ஸ் போட்டி, மதம் இனம் , நிறம் , நாடு என அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி சரிசமமான போட்டியை நிலைநிறுத்த 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக்சின் குறிக்கோள்கள் (Motto's) : விரைவாக (Faster) , உயரமாக (Higher) , பலமாக (Stronger)

முதல் ஒலிம்பிக் நாள், ஜூன் 23 /1948-ல் கொண்டாடப்பட்டது, அப்போது அந்த நிகழ்விலும், அதை ஒட்டி நடந்த விளையாட்டு போட்டிகளிலும் வெனிசுலா, பெல்ஜியம், கனடா, சுவிட்சர்லாந்து, போர்த்துகள், கிரீஸ் , ஆஸ்திரியா, பிரிட்டன் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.

கொரோனா பெருந்தொற்றால் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்ஸ், இன்னும் ஒரு மாதத்தில் ஜூலை 23 / 2021 தொடங்கி ஆகஸ்டு 08 2021 வரை நடைபெற உள்ளது.

ஒலிம்பிக்ஸ் மற்றும் பல விளையாட்டுக்கள், அறிவியல் , சமூக நிகழ்வுகள் , செய்திகளை தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்

@ saaral_academy



Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...