போலீஸ் ஸ்டேஷனில் இருந்து
போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி.
அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”.
ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில்
பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ
ஆம்புலன்ஸ்.
சித்த வைத்திய மையம் அம்பேத்கர்
கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது.
நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு
விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு.
இவரை உடனடியாக ஸ்டான்லி
மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர்
நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் கொடுத்தார்.
இவரை, உடனடியாக ஸ்டான்லியில்
சேர்க்க வேண்டும். நோயாளியை வைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓட்ட முடியாது. நிதானமாக,
விரைவாக ஓட்டுகிறார் யோகேஷ்வரன்.
இருபது நிமிடத்தில் ஸ்டான்லி
மருத்துவமனை. அட்மிஷன் போட ஒன்றரை மணி நேரம் ஆனது. அது வரை, ஆக்சிஜன் சிலிண்டரும் யோகேஷ்வரனின்
முயற்சியும் உயிரைக் காத்தது. அட்மிஷன் போட்ட போது அவரது ஆக்சிஜன் அளவு 98-க்கு வந்திருந்தது.
இதோ யோகேஷ்வரனின் வண்டி
மையத்திற்கு திரும்பி விட்டது. மீண்டும் காவல் நிலையத்தில் இருந்து போன். இந்த முறை
எஸ்.ஐ சொன்னது “உதவி செஞ்சதுக்கு நன்றி”.
”உதவி செய்வோம்” “வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment