Skip to main content

வீரமே! நீ வாழ்கவே!

 



       ”இது சாத்தியம் இல்லை.” ஆட்டோ ஆம்புலன்ஸ் பற்றி நாம் பேசிய போது, முதலில் தோன்றிய கருத்து இது.

       இது எப்படி சாத்தியம் ஆனது? ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய பிறகு எல்லோரும் கேட்கும் கேள்வி இது.

       இந்த சேவையை செய்யும் இளைஞர்கள் தாங்கள் செய்யும் வேலையின் அபாயத்தை உணர்ந்து தான் செய்கிறார்களா? இவர்களுக்கு அச்சம் இல்லையா? இவர்களின் குடும்பங்கள் தடுக்கவில்லையா?

       இது நிறைய பேரின் கேள்விகள். கேள்வி கேட்கும் எல்லோரும் உங்களைப் பாராட்டுகிறார்கள். நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் என நெஞ்சார வாழ்த்துகிறார்கள். உங்களுக்காக இறைவனை வேண்டும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றன.

       அருமை நண்பர்களே!

       ஆட்டோ ஆம்புலன்ஸ் வீரர்களே!

எங்கள் வியாசைத் தோழர்களே!   

       உங்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குகிறோம். உயிரைப் பணயம் வைக்கும் உங்களுக்கு நன்றி சொல்லவோ, வாழ்த்து சொல்லவோ எங்களுக்கு தகுதி இல்லை.   

உங்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் இந்த நாடு நன்றி சொல்லும். ஆம்! நாடு நன்றி சொல்லும்.    

வீர இளைஞர்களே! 

நாடு உங்களைக் கைவிடாது!

நாங்களும் உங்களை “வுட்ர மாட்டோம்”. 




-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-

சாரல்  

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...