Skip to main content

சுவாசக் காற்றே …. வா! உயிர் கொடு!

 





       ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் கான்சடிரேட்டர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை நன்கொடையாக மக்களுக்கு வழங்க உள்ளார்கள் திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்கள்.

இதயம் இயங்க சுவாசம் தேவை. நாட்டின் இதயம் சுவாசம் இல்லாமல் தவிக்கிறது. உடனடியாக ஆக்சிஜன் வேண்டும். மருந்துகள் வேண்டும். கருவிகள் வேண்டும்.

  எல்லாவற்றையும் விட உதவி செய்யும் நல்ல மனங்கள் வேண்டும். அத்தகைய நல்ல மனம் கொண்டவர்கள் திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்கள்.

இவர்கள் கொரோனா எதிர்ப்புப் போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். பத்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், ஐம்பது ஆக்சிமீட்டர்கள், ஐம்பது தெர்மல் ஸ்கேனர்கள், ஐம்பது PPE Kit உள்ளிட்டவற்றை வாங்கினார்கள். இவற்றை பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) மற்றும் சாரலிடம் ஓப்படைக்க உள்ளார்கள்.

இந்த உயிர் காக்கும் கருவிகளை கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்துவோம். இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவோம். அதிகபட்சமான மக்கள் பயனடைய செய்வோம்.    



இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இந்தப் பெரிய தொகையை மக்களுக்காக ஒதுக்கியுள்ள திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்கள் பெரிய முதலாளிகள் அல்ல. இவர்கள் தங்கள் சம்பளப் பணத்தை ஒன்று சேர்த்தார்கள். இந்த பெரிய தொகையை சிரமப்பட்டுத் திரட்டினார்கள்.

       இவர்கள், நாட்டின் இதயத்திற்கு சுவாசம் அளிக்கும் திருப்பணியை செய்துள்ளார்கள். இதற்கு எவரும் எளிதாக நன்றி சொல்ல முடியாது. இவர்களின் கொடை உள்ளம் நாட்டுக்கே முன்மாதிரி. இத்தகைய பங்களிப்புகளின் மூலமாகத்தான் கொடிய கொரோனாவை நாம் வெல்ல முடியும்.



திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்களே!

உங்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!    

உங்களின் உதவி நாட்டின் சுவாசமாக மாறும். பலரின் உயிரைக் காக்கும். அந்த உயிர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்.    

வாருங்கள்! கரம் கோர்ப்போம்!

நாட்டையும், மக்களையும் “வுட்ர மாட்டோம்”.

 -பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

சாரல்  

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...