Skip to main content

உயிர்க் காற்று

 

                           


”மூச்சு விட முடியவில்லை. தயவு செஞ்சு வர முடியுமா?”

அழைப்பு வந்தது தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து. குரலில் இருந்த பதட்டம் நம்மைப் பதற வைக்கிறது. ஆட்டோ ஆம்புலன்ஸ் பாய்கிறது.  

தனலட்சுமி என்ற வயதான பெண்மணி. கோவிட் பாசிட்டிவ் நோயாளி. மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. இப்போது, தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிஷனுக்காக காத்துக் கிடக்கிறார். அட்மிஷனுக்கு சில மணி நேரம் ஆகலாம். அதற்குள் மூச்சு முட்டுகிறது.  

நாம் சென்ற போது மூச்சுத் திணறிக் கிடந்தார். ஆக்சிஜன் அளவு பார்த்தோம். 74 என காட்டியது. மிக அபாயமான கட்டம். நமக்குள் நடுக்கம் பாய்கிறது. நிதானப்படுத்திக் கொள்கிறோம்.

ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்தோம். அவர் இருந்த காரை விட்டு இறங்க முடியவில்லை. ஆட்டோவில் இருந்து காருக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுத்தோம். அளவை சரியாக வைத்தோம்.




ஆக்சிஜன் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்த நெஞ்சுக் கூட்டிற்குள் உயிர்க் காற்று பாய்ந்தது. உயிரோட்டம் கூடியது. இரண்டு மணி நேர போராட்டம். ஆக்சிஜன் அளவு 98-க்கு உயர்ந்தது. அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் உயிர் வந்தது.

அந்தத் தருணத்தில் அவருக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. நமது வேலை முடிந்து விட்டது. விடை பெறும் போது அவரால் பேச முடியவில்லை. கண்கள் பேசின. ”காப்பாற்றி விட்டீர்கள்! நன்றி.”   

”காப்பாற்றுவோம்”  “வுட்ர மாட்டோம்”

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

 

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...