Skip to main content

பேசுவோம்! நம்பிக்கை ஊட்டுவோம்! விட்ரமாட்டோம்!!

 



”ஆஸ்பத்திரிக்கு நீங்க வருவீங்கன்னா, நாங்க வருவோம்”. நம்மை உரிமையுடன் அழைத்தது ஒரு கோவிட் நோயாளியின் குடும்பம்.

ஆக்சிஜன் ஆட்டோவை விரட்டினார் தமிழ்மணி. நின்ற இடம் ஓமந்தூரார் மருத்துவமனை. நோயாளி முதிய பெண்மணி. அவர் முகத்தில் வேதனை; உயிர் பயம். ஆக்சிஜன் அளவு 70. அட்மிஷன் ஆக பல மணி நேரம் பிடிக்கும்.   

தமிழ்மணி உற்சாகமாக பேசினார். “அம்மா உங்களுக்கு ஒண்ணும் இல்லை. சீக்கிரம் சரியாயிடுவீங்க”. இரண்டு மணி நேரம் ஆக்சிஜன் பாய்ந்தது. ஆக்சிஜன் அளவு 98-க்கு வந்தது.

”உங்களுக்கு சரியாயிடுச்சு அம்மா”. தமிழ்மணியின் உற்சாகம் அம்மாவையும் தொற்றிக் கொண்டது. கண்களில் நம்பிக்கைச் சுடர் தெரிந்தது. சிகிச்சை பலனளிக்க இந்த நம்பிக்கை அவசியம்.   

அம்மாவிற்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. தமிழ்மணி ஆக்சிஜன் கொடுத்தார். அதை விட முக்கியமாக நம்பிக்கை கொடுத்தார்.

மருத்துவமனைக்குள் செல்லும் முன் அம்மா தெம்பாக சொன்னார். “இப்படி பேசிக்கிட்டு இருந்தாலே நான் நல்லா இருப்பேன் தம்பி.”

”பேசுவோம்”  “வுட்ர மாட்டோம்”



-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...