Skip to main content

ஆட்டோ ஆம்புலன்சின் முதல் பயணம்!

 

ஆட்டோ ஆம்புலன்சின் முதல் பயணம்!

       ஜுரம், தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப் பிரச்சனை என்ற அறிகுறிகள் பலருக்கு இருக்கிறது. சோதித்தால் கோவிட் பாசிட்டிவ் என வரும். இவர்களில் 15% பேர் மட்டும் தான்  மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். 1% பேருக்கு தான் ஆக்சிஜன் தேவைப்படும். 85% பேரை வீட்டில் வைத்தே குணப்படுத்தலாம்.



       ஆனால், இந்த 15% பேரை தக்க சமயத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். தக்க சமயத்தில் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இது சாத்தியம் இல்லை. ஆனால் ஆம்புலன்சுக்கு கடும் தட்டுப்பாடு. அதன் கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது. சாதாரண உழைப்பாளி மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது மிக சிரமமாகி விட்டது.   

இந்தப் பிரச்சனையை நம்மால் தீர்த்து விட முடியாது. இருந்தாலும் சாதாரண மக்களின் ஆம்புலன்ஸ் தேவையை நிறைவேற்ற நம்மால் முடிந்ததை செய்ய முடிவு செய்தோம். வட சென்னைப் பகுதியில் இருந்து தொடங்க முடிவு செய்தோம். வியாசைத் தோழர்களும், சாரலும் இணைந்து இதை முன்னெடுத்தோம்.

நம்மால் இது முடியாது என்று தான் முதலில் எண்ணினோம். ஆனால், நமக்கு உதவ பலர் முன் வந்தனர். அந்த நண்பர்களின் உதவியுடன் முதல் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓடத் தொடங்கி விட்டது.

வியாழக்கிழமை (13.01.2021) அன்று முதல் நோயாளிக்கு உதவி செய்தது. கும்மிடிப்பூண்டியில் இருந்த ஒரு மூதாட்டிக்கு ஆம்புலன்ஸ் சேவை தேவைப்பட்டது. இவரை கும்மிடிப்பூண்டியில் இருந்து தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். இவருக்கு கோவிட் சோதனை செய்தோம். முடிவு தெரிய 2 நாட்கள் ஆகும் என்பதால் ஒரு உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளோம்.



நண்பர்களே ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி விட்டோம். அடுத்த பத்து நாட்களுக்குள் மேலும் 5 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை களத்தில் இறக்கி விட வேண்டும். இதற்காக நம் சக்திகளைக் குவித்து வேலை செய்வோம்.  

   நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுவோம்” ”கொரோனாவை விரட்டுவோம்”.  

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

-வியாசைத் தோழர்கள்

-சாரல்  

 

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...