பட்டினி என்பது கொரோனாவின் பக்க விளைவுகளில்
ஒன்று. லாக்டவுன் காலத்தில் வீடில்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் உழைப்பாளிகள் என்ன
செய்வார்கள்? இவர்களில் சிலருக்காவது உணவு
கொடுக்க முயற்சி செய்து வருகிறோம்.
நேற்று, மதுரவாயல் அரோமா உணவக உரிமையாளர் 15 பொட்டலம் பிரியாணியை
வழங்கினார். இதனை வீதிகளில் உறங்கும் உழைப்பாளிகளுக்கு கொடுத்தோம். பதினைந்து பேரின்
ஒரு வேளைப் பசியைப் போக்கிய அரோமா உரிமையாளருக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூடுதலாக உணவு அளிக்க, மதுரவாயல் பகுதியில் உள்ள உணவகங்களில்
பேசி வருகிறோம்.
நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “பசியைப் போக்கும் போரில் இறங்குங்க”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)
-சாரல், மதுரவாயல்-அமைந்தகரை

Comments
Post a Comment