Skip to main content

ஒன்றுபடுவோம் - DPAC+சாரல் அறிக்கை

 

ஒன்றுபடுவோம்!








       நாங்கள் குரோம்பேட்டை பகுதி இளைஞர்கள். நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா எதிர்ப்பு வேலைகளை செய்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்த மூன்று பேர் கொரோனா-வால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.  பாதிப்பு தீவிரமாக இருந்தது.  

       தீவிர பாதிப்பில் இருந்த இரண்டு பேரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். இருவரையும் சி.டி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். இருவருக்கும் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தோம். மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தோம்.  இறுதியாக பல்லாவரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரு வார  சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக தேறி வருகின்றனர்.          

மிதமான பாதிப்பில் இருந்த ஓருவரை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளோம். இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் வாங்கித் தருகிறோம்.

இவர்கள் மூன்று பேரிடமும் தொடர்ந்து பேசி நம்பிக்கையூட்டி வருகிறோம். இந்த நோயைப் பொறுத்த வரை நம்பிக்கை தானே முதல் மருந்து.

இதன் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆர்சனியம்-ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மக்களிடம் விநியோகித்தோம். சுமார் 100 பேரிடம் இந்த மருந்து கொடுத்துள்ளோம்.    

நாங்களும் தொடங்கி விட்டோம். எல்லோரும் தொடங்குங்கள்! இன்றே தொடங்குங்கள்! நமது ஒன்றுபட்ட தாக்குதல்களால் கொரோனாவை நொறுக்கலாம்!

நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “ஒன்றுபடுங்க”  

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், குரோம்பேட்டை  

 





Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...