Skip to main content

உதவிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் - DPAC+வியாசை தோழர்கள்+சாரல் அறிக்கை

 

நன்றி அல்ல …. வாழ்த்து!

       நாட்டுப்பற்று, மக்கள்ப்பற்று, பகுத்தறிவு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை இளம் தலைமுறையிடம் உருவாக்க நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் கொரோனா தாக்கியது. நாம் நிவாரண வேலைகளில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்தது.


மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது நாடு. பெருந்தொற்றால் மடிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது. என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? என தெரியவில்லை. இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குவோம். இருப்பதைக் கொண்டு தொடங்குவோம்.

ந்த வகையில் கடந்த 2 வாரங்களாக செயல்பட்டு வருகிறோம். சாரலைச் சேர்ந்த நாம் பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) உடன் இணைந்து வேலை செய்கிறோம்.

 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்ய உதவுவது, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுத் தருவது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருத்துகளை வாங்கித் தருவது, நோயால் தாக்கப்பட்டவர்களிடம் ஆறுதலாக பேசுவது, நம்பிக்கையூட்டுவது, ஆல்பம்-30 மருந்தை விநியோகிப்பது, வேலை இழந்து வாடும் உழைப்பாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது ஆகிய வேலைகளை செய்து வருகிறோம். தற்போது வியாசைத் தோழர்களுடன் இணைந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் தொடங்கி உள்ளோம்.

       நாம் செய்யும் வேலை நமது சக்தியை மீறியது. நண்பர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியம் இல்லை. அந்த வகையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓடுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது பம்மல்-சங்கர் நகர் நண்பர்களின் பங்களிப்பு.



       அவர்களுக்கு நம்மைப் பற்றி நேரடியாகத் தெரியாது. ஒரு நண்பர் மூலமாக கேள்விப்பட்டு நம்மோடு கரம் கோர்த்துள்ளனர். திரு.கணபதி, திருமதி.மீரா, திருமதி.லஷ்மி,  திரு.நல்லமுத்து,  திரு.சத்தியநாராயணன் ஆகியோர் இணைந்து 50,000/- ரூபாய் வழங்கியுள்ளனர்.

       ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓடுவதற்கு இந்த நண்பர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாம் இவர்களுக்கு நன்றி சொல்லி அந்நியமாக்க மாட்டோம். வாழ்த்து சொல்லி நம்மோடு இணைத்துக் கொள்வோம்.

எங்களின் சமூக் கடமையில் கரம் கோர்த்துள்ள பம்மல்-சங்கர் நகர் நண்பர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!    

   நாட்டையும், மக்களையும் “வுட்ர மாட்டோம்”. 

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

-வியாசைத் தோழர்கள்

-சாரல்  

 

 

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...