எனது பொங்கல் பரிசு - தந்தை பெரியார் தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டா டலாம் என்று சுயமரி யாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் பொங்கல் பண்டிகையைப் போற்றிக் கொண்ட...
ஒலிம்பிக்ஸ் போட்டியை ஒருங்கினைக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டதை ஒட்டி இந்நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் விளையாட்டை ஊக்குவிக்கவும், வாழ்க்கையில் விளையாட்டுக்கு ஓர் முக்கிய பங்குண்டு என்ற செய்தியை அனைவரிடமும் பரப்பும் விதமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக்ஸ் போட்டி, மதம் இனம் , நிறம் , நாடு என அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி சரிசமமான போட்டியை நிலைநிறுத்த 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஒலிம்பிக்சின் குறிக்கோள்கள் (Motto's) : விரைவாக (Faster) , உயரமாக (Higher) , பலமாக (Stronger) முதல் ஒலிம்பிக் நாள், ஜூன் 23 /1948 -ல் கொண்டாடப்பட்டது, அப்போது அந்த நிகழ்விலும், அதை ஒட்டி நடந்த விளையாட்டு போட்டிகளிலும் வெனிசுலா, பெல்ஜியம், கனடா, சுவிட்சர்லாந்து, போர்த்துகள், கிரீஸ் , ஆஸ்திரியா, பிரிட்டன் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கலந்துகொண்டன. கொரோனா பெருந்தொற்றால் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்ஸ், இன்னும் ஒரு மாதத்தில் ஜூலை 23 / 2021 தொடங்கி ஆகஸ்டு 08 2021 வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ் மற்றும் பல விளையாட்டுக்கள், அறிவியல் , சமூக நிகழ்வுகள் , செய்திகள...