”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார். இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள். ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை” *** *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள். எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை. ...





Comments
Post a Comment