Skip to main content

இங்கிருந்து தொடங்கலாம்!

 

இங்கிருந்து தொடங்கலாம்!

       மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது நாடு. பெருந்தொற்றால் மடிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இதயத்தை இழை இழையாக அறுக்கிறது சோகம்.

       ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றுகிறது. என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? நீண்ட நேரம் மண்டையை உடைத்துக் கொண்ட பிறகு இப்படி முடிவு செய்தோம். இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குவோம். இருப்பதைக் கொண்டு தொடங்குவோம்.

Photo credits: istockphotos


       நாங்கள் தேனாம்பேட்டை, மாம்பலம் பகுதிகளில் துரித உணவகங்களில் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்தவர்கள் யாரெல்லாம் கொரோனா-வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என பட்டியலிட்டோம். பதினோரு பேர் வந்தனர். இவர்களோடு பேசினோம். இவர்களில் 10 பேர் மிதமான பாதிப்பில் இருக்கிறார்கள். ஒருவர் தீவிர பாதிப்பில் இருந்தார்.

       தீவிர பாதிப்பில் இருந்த ஒருவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். முதல் சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தது. அவர் கடுமையான காய்ச்சல், இருமல் என ஒரு வாரத்திற்கும் மேலாக அவதிப்பட்டு இருக்கிறார். இது குறித்து எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். அதன் அடிப்படையில் சி.டி ஸ்கேன் எடுத்தோம். பாசிட்டிவ் என வந்தது. நுரையிரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தோம். அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இறுதியாக தாம்பரம் சானடோரியத்தில் அரசு நெஞ்சக மருத்துவமனையில் சேர்த்தோம். நான்கு நாள் சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக தேறி வருகிறார்.          

மிதமான பாதிப்பில் இருந்த 10 பேரில் 3 பேர் பரிசோதனை செய்யவில்லை. இவர்களைப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். இவர்களும் பாசிட்டிவ். தற்போது, இந்த 10 பேரும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் வாங்கித் தருகிறோம். இவர்களிடம் தொடர்ந்து பேசி நம்பிக்கையூட்டி வருகிறோம். 

வுட்ராதீங்க.....தொடங்குங்க


நாங்கள் தொடங்கி விட்டோம். இருந்த இடத்தில் இருந்தே தொடங்கி விட்டோம். வாருங்கள் நண்பர்களே! நீங்களும் தொடங்கலாம்! இன்றே தொடங்கலாம்! இருக்கும் இடத்தில் இருந்தே தொடங்கலாம்! நமது சிறிய முயற்சிகளால் பெருந்தொற்றை ஒழிக்கலாம்!

நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “தொடங்குங்க” 

 -பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், தேனாம்பேட்டை  

                                          (07.05.2021)

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...