மற்றொரு தொடக்கம்!
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக
ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினோம். இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குவோம். இருப்பதைக்
கொண்டு தொடங்குவோம் என முடிவு செய்தோம்.
நாங்கள் மதுரவாயல்-அமைந்தகரை பகுதி
வாழ் நண்பர்கள். கொரோனா-வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தோம்.
எங்களுக்கு தெரிந்தவர்கள் 7 பேர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் 7 பேரும்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்
பேரில் மருந்துகள் வாங்கித் தருகிறோம். இவர்களிடம் தொடர்ந்து பேசி நம்பிக்கையூட்டி
வருகிறோம்.
ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து
மக்களிடம் அச்சம் பரவி வருகிறது. இதனைப் போக்குவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். மதுரவாயல்-அமைந்தகரை
பகுதிகளில் கொரோனா பற்றிய அச்சத்தைப் போக்கும் வகையில் மக்களிடம் பேசுகிறோம்.
நாட்டையும், மக்களையும் காப்பாற்றும் போராட்டத்தில்
எங்களால் முடிந்ததை நாங்கள் தொடங்கி விட்டோம். நீங்களும் தொடங்கலாம்.
நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “உடனே தொடங்குங்க”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், மதுரவாயல்-அமைந்தகரை
(09.05.2021)
படங்கள்:













Comments
Post a Comment