Skip to main content

பாவேந்தர் பாரதிதாசனின் 131 வது பிறந்தநாள்

 





இன்று பாவேந்தர், புரட்சிக்கவிஞர் என போற்றப்படும் பாரதிதாசன் அவர்களின் 131 வது பிறந்தநாள்.

தமிழ் தெரிந்த எல்லோருக்கும் பாரதிதாசனை தெரியும், பாரதிதாசனை பிடித்த எல்லோருக்கும் தமிழை பிடிக்கும். அவர் உலகை நேசித்த கவிஞர், மனிதகுலத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சியாகி கவிதை புனைந்தவர், மனிதகுல மான்பின் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் கோவப்பட்டு கவிதை முழங்கியவர்.


கம்பீரமான நடை, கணீரென்ற குரல், மேடை அதிர கவிதை பாடுவார் பாரதிதாசன், கவிதைகளெல்லாம் யாப்பு நடையில் இருந்தபோதும் மக்களின் மனதை கிளரும்படி எளிய நடையில் கவிதை பாடுவார்.

அவர் சுதந்திரத்தை விரும்பியவர், சுதந்திர ஏக்கத்தில் எழுதுகிறார்:

தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்;

மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;

பொன்னே, மணியே என்றுனைப் புகழ்வார்;

ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!

உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,

வான வீதியில் வந்து திரிந்து

தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்

சோலை பயின்று சாலையில் மேய்ந்து

வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!

தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?

அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.

அக்கா வந்து கொடுக்கச்

சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?”

அவர் ஏழ்மையை வெறுத்த கவிஞர், அந்த வெறுப்பை கொண்டு கனலாய் எரியும் வரிகள்:

“ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்

    உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

     ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ.”

பெரிய உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் என யாரை சொல்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் கவிஞர்:

“தன் வீடு ,தன் பிள்ளை, தன் குடும்பம்,  தன்னுடைய சம்பளம்  என வாழும் மனிதர்களின் உள்ளம் கடுகு போன்றது .

தன் தெரு , தன் ஊர் என்று வாழும் மனிதர்களின் உள்ளம் கடுகை விட சற்று பெரிய துவரை போன்றது. 

அப்போ தூய  உள்ளம் ‌பெரிய உள்ளம் கொண்டவர் யார்?  

உலக மக்கள் அனைவரின் ‌ நல்வாழ்வை விரும்புவர் யாரோ அவரே பெரிய உள்ளம் உடையவர்.”

நாம் அனைவரும் அவர் விரும்பியதைப்போல பெரிய உள்ளம் கொண்டோராக வளர பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளில் உறுதியேற்போம்.

Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...